விண்டோஸ் விஸ்டாவின் இறுதி சோதனை பதிப்பு வெளியீடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மென்பொருளான விண்டோஸவிஸ்டாவின் இறுதி சோதனை பதிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த இறுதி சோதனை பதிப்பை மென்பொருள் சோதனை செய்யும் மிக குறிப்பிட்ட சில தொழில்நுட்ப அறிஞர்களுக்கு மட்டும் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது.

இந்தப் பதிப்பின் இன்னும் சில சோதனை பதிப்புக்கள் அடுத்த வாரம் மற்ற சோதனை அறிஞர்களுக்கும் பரவலாக வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள விண்டோஸவிஸ்டாவின் ப்ளாக் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஸ்டா பற்றிய அதிகமான விளக்கங்களையும் மைக்ரோசாப்ட் வெளியிடவுள்ளது. சோதனை பதிப்புக்களின் கருத்துக்கள் வந்த பின் மேலும் ஒரு சோதனை பதிப்பையும் அந்நிறுவனம் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஸ்டாவை வரும் நவம்பர் மாதத்தில் பெரிய வர்த்தகங்களுக்கும் ஜனவரியில் மற்ற நுகர்வோருக்கும் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் வெளியிடுவதில் இனி மேல் எந்த தடை வந்தாலும் அதனை மைக்ரோசாப்ட் பொருட்படுத்தாது என்றும் கூறியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் மைக்ரோசாப்ட் வெளியிடும் முதல் விண்டோஸஆப்பரேட்டிங் சிஸ்டம் விஸ்டா என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலத்திற்கு பின் இதனை வெளியிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு மாபெரும் மைல் கல்லாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்