மெல்போர்னில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (20:15 IST)
ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டு படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் நகரிலுள்ள கிளிஃப்டன் ஹில் விடுதிக்கு அருகே இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை காவல்துறையினர் இன்று காலை 6 மணியளவில் கண்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் என்று பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

இந்திய மாணவரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. அவருடைய காரில் பயணித்த ஒருவர்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று சந்தேகிப்பதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அடுத்து, வாடகைக் கார் ஓட்டுனர்கள், தங்களுடைய பாதுகாப்பிற்குத் தேவையான முன்னெச்சரிக்கை கருவிகளை கார்களில் பொறுத்த வேண்டும் என்று கோரி மெல்போர்னில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்