பிரிட்டனில் குடியேற்ற அதிகாரிகள் திடீர் சோதனை!

சனி, 5 ஏப்ரல் 2008 (17:49 IST)
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்யும் தொழிலாளர்களை கண்டறிய இந்தியர்களின் உணவு விடுதிகளில் குடியேற்ற அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய குடியேற்ற விதிகளின் அடிப்படையில், லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும், அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டினர் விரும்பி வரும் இந்திய உணவு விடுதிகளில் அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சமையல் கலைஞர்கள் உட்பட சட்ட விரோதமாக தங்கியுள்ள பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சோதனையின்போது, அதிகாரிகள் கடுமையான முறையில் நடந்துகொள்வதாக புகார் கூறப்படுகிறது.

இந்த திடீர் சோதனைகள் அங்கு நிலைமையை மோசமாக்கி வருகின்றன. இதனால், இந்தியர்களின் உணவு விடுதிகளில் பணியாளர்களுக்கபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டப்படி சட்டவிரோதமாக தங்கி இருக்கும் தொழிலாளர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டன் அரசு தெரிவித்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்