இரு நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்து பக்ரைன் வந்துள்ள இந்திய அயல்நாடு வாழ் இந்தியர்களின் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
அயல்நாடு வாழ் இந்தியர்களின் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி 3 நாள் பயணமாக பக்ரைன் தலைநகர் துபாய் வந்தள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளிடையேயான தொழிலாளர் உறவு தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்த உள்ளதாக பக்ரைனுக்கான இந்திய தூதர் பால கிருஷ்ண ஷெட்டி தெரிவித்தார்.
பக்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவருமான மாநித்-அல்-ஆல்வி மற்றும் அயலுறவுத் துறை இணை அமைச்சரும், தொழிலாளர் நிதியத்தின் தலைவருமான முனைவர் நிசார்-அல்-பகரனாவையும், வயலார் ரவி சந்தித்து பேசுகின்றார்.
தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமைச் செயல் லுவலர் அல்-ராதி இன்று வயலார் ரவிக்கு லஞ்ஜியோனில் விருந்து அளிக்கின்றார். அந்த விருந்தின் போது பக்ரைனில் தற்போது உள்ள தொழிலாளர் சந்தை செயல்பாடுகள் குறித்து இருவரிடம் விவாதிக்க உள்ளதாக இந்திய தூதர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் பிரவாசி பாரதிய திவாஸ் - 2008க்கான ஆயத்த பணிகள் குறித்து பக்ரைன் இந்திய சமூகத்தினரிடையே வயலார் ரவி கலந்துரையாடல் உள்ளார்.
மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை நாளை மத்திய அமைச்சர் வயலார் ரவி தொடங்கி வைக்கின்றார். இந்நிகழ்ச்சிகள் பக்ரைன் கேரளீய சமாஜம் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அயல்நாடு வாழ் இந்தியர்களின் சர்வதேச கலாச்சார காங்கிரஸ் செய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் ஒன்றிலும் மத்திய அமைச்சர் வயலார் ரவி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
பக்ரைனில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் தான் அதிகம். தொழிலாளர் துறையில் ஏற்படும் மாற்றம் அங்கு வாழும் இந்தியர்கள் அதிகம் பயனடைய வழி வகுக்கும் என்பதால் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியின் இந்த வருகை பக்ரைன் வாழ் இந்திய மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது