தொழிலாளர் உரிமை பாதுக்காக்க ஒத்துழைப்பு அவசியம் - வயலார் ரவி!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (13:46 IST)
வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்று 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க 'அபுதாபி பேச்சுவார்த்தை' என்ற தலைப்பிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கூட்டம் துபாயில் நேற்று துவங்கியது. இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், அயல்நாட்டு தொழிலாளர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்பட, தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் நாடுகள் மற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நாடுகளுக்கு இடையே உயர்ந்த ஒத்துழைப்பு, இணக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
"ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக தொழிலாளர்கள் சந்தையை உயர்த்த வேண்டும்" என்று அயல்நாடு வாழ் இந்தியர்களின் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி வலியுறுத்தியுள்ளார்.