சிங்கப்பூரில் வாழும் இந்திய மக்களின் பொழுதுபோக்கிற்காக இந்தாண்டு இறுதியில் புதிய தொலைக்காட்சி அலைவரிசை துவக்கப்பட உள்ளது.
அந்நாட்டு தகவல் தொடர்பு, கலைத்துறை மூத்த இணை அமைச்சர் பாலாஜி சதாசிவன் நாடாளுமன்றத்தில் கூறுகையில், "சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர், குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் தாய் மொழியின் மூலம் தாய் நாட்டை நினைவு கூறும் வகையில், 'வசந்தம்' என்ற தமிழ் அலைவரிசை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அலைவரிசையின் வார ஒளிபரப்பு நேரம் 29 மணிநேரத்தில் இருந்து 65 மணிநேரமாக அதிகரிக்கப்படும்" என்றார்.
தொடர்கள், தமிழ் செய்திகள், உண்மையை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகள் போன்ற குடும்ப பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மற்ற இந்திய மொழி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. காலையில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும், பிற்பகலில் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளும், மாலை நேரங்களில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அலைவரிசையை சிங்கப்பூரின் மீடியாகார்ப் நிறுவனம் நடத்த உள்ளது.