கனடாவில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 44 லட்சம் ஆகும். அவர்களில் 5 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
அந்த மாநிலத்தில் அதிக அளவில் பேசப்படும் மொழிகளில் 3-வது இடத்தில் பஞ்சாபி மொழி இருக்கிறது.
அந்த மாநில சட்டசபைக்கு கடந்த புதன்கிழமை தேர்தல் நடந்தது. 79 பேர் கொண்ட சபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 16 இந்தியர்கள் போட்டியிட்டனர். ஆளும் லிபரல் கட்சி சார்பில் 7 இந்தியர்களும், எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக்கட்சி சார்பில் 9 பேரும் போட்டியிட்டனர். இதில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட 7 பேரும் வெற்றி பெற்றனர்..
வெற்றி பெற்ற 7 பேரில் வல்லி ஒப்பல் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். அவர் ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
அவர் இந்த முறை தன் சொந்த தொகுதியான டெல்டா சவுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியர் திலீப் அதய்டேயை தோற்கடித்தார்.