இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உதவ கா‌ல் செ‌ன்ட‌ர், இணைய தள‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் ‌தி‌ட்ட‌ம்!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (17:18 IST)
மலே‌சியா‌வி‌ல் வ‌சி‌க்கு‌ம் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யினரு‌க்கு உதவு‌ம் வகை‌யி‌ல் இணைய தள‌ம், கா‌ல் செ‌‌ன்ட‌ர் ஆ‌கியவ‌ற்றை அமை‌க்க மலே‌சிய இ‌ந்‌திய‌க் கா‌ங்‌கிர‌ஸ் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌ட‌த்தோ சா‌மி வேலு கூறுகை‌யி‌ல், "மலே‌சிய அரசுட‌ன் மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் நட‌த்து‌ம் ‌விவாத‌ங்க‌ள், இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌‌ரி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளாக அமை‌ச்சரவை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ள அமை‌ச்ச‌ர்க‌‌ளி‌ன் செய‌ல்பாடுக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா‌த் தகவ‌ல்களு‌ம் இணைய தள‌த்‌தி‌ல் அ‌ளி‌க்க‌ப்படுவதுட‌ன், அவை கு‌றி‌ப்‌பி‌ட்ட இடைவெ‌ளி‌யி‌ல் தொட‌ர்‌ந்து புது‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேனர மா‌ணி‌க்க வாசக‌ம் பகு‌தி‌யை‌த் தலைமை‌‌யிடமாக‌க் கொ‌ண்டு அமையவு‌ள்ள கா‌ல் செ‌ன்ட‌ரி‌ல் க‌ல்‌வி, கடனுத‌வி, நல‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்களை அ‌றியலா‌ம் எ‌ன்று கூ‌றிய அவ‌ர், இத‌ன் ஒ‌வ்வொரு ‌கிளைக‌ளிலு‌ம் குறை‌ந்தது 50 இளைஞ‌ர்க‌ள் 3 மாத‌த்‌தி‌ற்கு‌ள் தே‌ர்வு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்