இங்கிலாந்து செல்ல வேண்டுமா? 53 விவரங்கள் தரத் தயாராக இருங்கள்!
Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:40 IST)
பயங்கரவாதம ், பயங்கரவாதம் தொடர்பான மிரட்டலை எதிர்கொள்ள 1.2 பில்லியன் பவுண்ட் செலவில் மின்னணு எல்லை அமைக்கும் பணியை அடுத்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து அரசு நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளத ு. இதன்படி, இங்கிலாந்துக்கு செல்பவர்களும ், அங்கிருந்து வெளியேறுபவர்களிடமிருந்தும் 53 வகையான தகவல்களைப் பெறவும் இத்திட்டம் வகை செய்கிறது. ஒவ்வொரு பயணத்தின் போதும் கிரிடிட் கார்டு விவரங்கள ், விடுமுறை கால தொலைபேசி எண்கள ், பயணத் திட்டங்கள ், மின் அஞ்சல் முகவர ி, வாகன எண ், தவறவிட்ட முந்தைய விமானங்கள் தொடர்பான விவரங்களை பாதுகாப்பு அதிகாரிகள் கேட்கும் போது பயணிகள் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. மின்னணு எல்லைத் திட்டம் இங்கிலாந்துக்கு வந்த ு, செல்லும் ஒவ்வொரு பயணியையும் கண்காணிக்கும். ஒரு பயணி பயணம் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக பயண சீட்டு பெற்றவர்கள் தொடர்பாக சுங்கம ், குடியேற்றத் துற ை, பாதுகாப்பு பணி சார்ந்தவர்களுடன் காவல் துறையினர் தகவல் பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை உள்ளது. சந்தேகப்படும் படியாக பயணம் செய்யும் ஆண் அல்லது பெண்ணை விமான நிலையத்திலிருந்தே ா, பேருந்த ு, ரயில ், துறைமுகம ், நீர்வழிப் புறப்பாட்டு இடங்களில் இருந்தோ உடமைகளுடன் அவர்களை திருப்பி அனுப்ப இத்திட்டம் வகை செய்கிறது. நீதிமன்றங்களில் அதிகபட்ச தண்டத்தொகை செலுத்தியவர்கள ், வேகமாக காரை ஓட்டி தண்டம் கட்டியவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் அவர்களும் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாத ு. பாதுகாப்பை பலப்படுத்த வணிக வளாகங்கள ் , விமான நிலையங்கள ், துறைமுகங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள ், அவர்களின் உடன் பொருட்கள் ஆகியன மட்டுமின்றி இப்படிப்பட்ட கூடுதலான சோதனைகளையும் மேற்கொள்ளும் பட்சத்தில் கால விரயம்தான் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.2 பில்லியன் பவுண்டுகளைச் இங்கிலாந்து அரசு செலவிட உள்ளத ு. போக்குவரத்து நிறுவனங்கள் ஆண்டுக்கு இதுபோன்ற தகவல்களை அரசின் உத்தரவுபடி சேகரிக்க 20 மில்லியன் பவுண்டுகளைச் செலவு செய்கின்ற ன. இந்தத் தொகையை பயணச்சீட்டு மூலமாக வாடிக்கையாளர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். இந்த தொகையை ஈடுகட்ட புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்ட வருகிறது. வரும் 2009 ஆம் ஆண்டு மத்தியில் நடைமுறைக்கு வர உள்ள இத்திட்டத்தால் விமான நிலையங்கள ், துறை முகங்களின் அன்றாட பணிகள் முடக்கப்படும் என்ற எதிர்ப்பும் உருவாகியுள்ளத ு. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்த ு, செல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் 305 மில்லியன் பயணிகளின் முழு விவரங்கள், அதாவது ஒவ்வொரு பயணியின் ஒவ்வொரு பயணம் தொடர்பான தகவல்களும் இங்கிலாந்து அரசிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு. விமானம ், படக ு, சிறிய ரக விமானம் ஆகிய எந்த வழியில் வந்தாலும ், போனாலும் சரி கண்காணிப்பும ், கணக்கெடுப்பும் தொடரும ். அதே போன்று ஈரோ சுரங்கப் பாதை மூலமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் பிரான்சுக்கு சென்றாலும ், இங்கிலாந்து குடிமகன் கடலுக்குள் படகில் சென்று திரும்பினாலும் இந்த கண்காணிப்பும ், கணக்கெடுப்பும் தொடரும் என்கிறது இத்திட்டம். மேலும் இத்திட்டத்தை நடைமுறை படுத்தவதில் இங்கிலாந்து குடிமகனுக்கும ், அயல் நாட்டினருக்கும் ஒரே அளவுகோல் பின்பற்றப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளத ு. மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிமாஃபோர் என்ற முன்னோடித் திட்டத்தின் மூலம் இதுவரை 29 மில்லியன் பயணிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செயலியில் பார்க்க x