இந்திய-அமெரிக்க தம்பதியினருக்கு 40 ஆண்டு சிறை?

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:49 IST)
இரு பணிப்பெண்களை உடல் ரீதியாகவும், ரீதியாகவும் வேதனைக்குள்ளாக்கிய இந்திய-அமெரிக்க தம்பதியினருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த மகிந்தர் முரளிதர் சப்னானி (51), இவரது மனைவி வர்ஷா (45) ஆகியோர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். சொந்தமாக நறுமண தைலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ள சப்னானி மிகப்பெரிய தொழிலதிபர்.

இந்தோனேசியாவை சேர்ந்த சமீரா, ஈனுங் ஆகிய இருவரை வீட்டு வேலைக்காக அமர்த்தினர். இவர்களை தினமும் 18 மணி நேரத்திற்கும் ஆதிகமாக வேலை வாங்கியும், துடைப்பம், குடையால் தாக்கியும், காலால் உதைத்தும் கொடுமைப்படுத்தியதாக இந்திய-அமெரிக்க தம்பதியினர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

"25 மிளகாய்களை சாப்பிட வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். தம்பதியினர் நவீன கால அடிமைத்தனத்தை கையாண்டுள்ளனர்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளை தம்பதியினரின் வழக்கறிஞர் ஜெப்ரி ஹோப்மேன் மறுத்தார்.

ஆனால், இந்திய-அமெரிக்க தம்பதியினர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தம்பதியினருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்