அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம்!
வியாழன், 21 பிப்ரவரி 2008 (15:09 IST)
அரபு நாடுகளில் பணிபுரிய தேர்வு செய்யப்படும் இந்திய பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 1,100 தினார் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அறிவித்துள்ளது.
எனினும், தனியார் நிறுவனங்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும் சமயத்தில் மாத வருமானம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் தினார் வரை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கு முன்னர் இந்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த குறைந்தபட்ச ஊதியம் 600 முதல் 650 ஆக இருந்தது.
அனைத்து தனி நபர்களும் இந்தியாவில் இருந்து வீட்டு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்யும் போது கட்டாயமாக 2,500 டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இந்த முழுத்தொகையும் அவர்களின் ஒப்பந்தம் முடிந்த பின்னர் திரும்ப கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டு வேலைக்காக 30 வயதுக்கு குறைந்த பெண்களை தேர்வு செய்வதை இந்திய அரசு கடந்த சில காலங்கள் முதல் தடை செய்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு வரும் பெண்களுக்கு அதன் பின்னர் செயல்படும் நிலையில் உள்ள மொபைல் தொலை பேசியும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்ய இந்தியாவிலிருந்து அழைத்து செல்லப்படும் பெண்கள் அவர்களின் உரிமையாளர்களால் ஊதியம் சரியாக வழங்கப்படாமை, பாலியல் கொடுமை உள்ளிட்ட இன்னல்களுக்கு அடிக்கடி உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒவ்வொரு வருடமும் வரும் புகாரை அடுத்து இந்த புதிய பாதுகாப்பு, சரிபார்த்தல் முறைகள் அந்த பெண்களின் பாதுகாப்பு நலனுக்கு வழி வகுக்கும்.
இது போன்று வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்காக பெண்களை அனுப்பும் நாடுகளில் அவர்களின் தேர்வை கடினமாக்கியதில் இந்தியாதான் முதல்நாடு என்றும் கூறியுள்ளது.