அரபு நாடுகளில் 75 விழுக்காடு அயல்நாட்டினர் வாழ்கின்றனர்!

புதன், 27 பிப்ரவரி 2008 (18:57 IST)
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தொழிலாளர்களில் 75 விழுக்காட்டினர் அயல்நாடுகளை சேர்ந்தவர்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

அதில் இந்தியர்கள்தான் அதிகளவில் உள்ளனர். மனிதவள மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வில், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் 13.8 விழுக்காடும், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் 18.2 விழுக்காடும் உள்ளதாக தெரிவிக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 56 லட்சத்தில், 8 லட்சத்து 66 ஆயிரத்து 779 பேர் மட்டுமே உள்நாட்டினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...!

வெப்துனியாவைப் படிக்கவும்