அய‌ல்நாடு வா‌ழ் இந்தியர்கள் வருமான வரி தா‌க்க‌ல் விதி தளர்வு!

புதன், 24 செப்டம்பர் 2008 (21:05 IST)
2008-09 க‌ண‌க்‌கீ‌ட்டு ஆ‌ண்டி‌ற்கான வருமான வ‌ரி கண‌க்கை, அய‌ல்நாடு வா‌ழ் இ‌ந்‌திய‌ர்க‌‌ளி‌ன் முகவ‌ர்க‌ள் இணைய‌த்‌தி‌ன் வா‌யிலாக தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பது க‌ட்டாய‌மி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய நேரடி வ‌ரி வா‌ரிய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது!

கணக்கீட்டு ஆண்டு (அசெஸ்மெ‌ண்ட் இயர்) 2008-09க்கான வருமாவரி கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் 28-03-08 தேதியிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

வருமானவரிச் சட்டம் 1962 (12)இனபடி ITR-5ம் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் மற்றும் 44ஏ‌பி பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்லது ITR-6 ம் படிவத்தில் கணக்கு தாக்கல் செய்பவர்கள் 2008-09ஆம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இணைய‌த்‌தி‌ன் வா‌யிலாக மட்டுமே தாக்கல் செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டது.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முகவர்கள் இருப்பது‌, ஒரு முகவரே வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் பலருக்கு முகவராக செயல்படுவது போன்ற சூழ்நிலையில் இணையதள கணக்கு தாக்கலில் குளறுபடி ஏற்படும் என கூறப்பட்டது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் ஒருவருக்கு ஒரு PAN எண், ஒரு வருமாவரி தாக்கல் படிவம் என்ற அடிப்படையிலேயே வருமாவரிக்கான கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் 22.09.08 அ‌ன்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, கணக்கீட்டு ஆண்டு 2008-09க்கு வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் முகவர்கள் இணைய‌த்‌தி‌ன் வா‌யிலாக கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்