அமெரிக்காவில் தமிழக கணினி பொறியாளர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

மேலூர் செட்டியார் தெருவில் வசிப்பவர் ராமசுப்பிரமணியன். இவரது ஒரே மகன் சரவணன் (32). இவர் கணினி பொறியாளர் ஆவார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் ஆர்லிங்டன் ஷீல்டர் ரோடு பகுதியில் உள்ள கனாகோ கேஸ்டேசன் மற்றும் வெஸ்ட் பயோனியர் பார்க்வே என்ற நிறுவனத்தில் அவர் கணினி பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று 12 மணி அளவில் மேலூரில் உள்ள அவரது வீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து அதிர்ச்சித் தகவல் வந்தது. பொறியாளர் சரவணன் வேலை முடிந்து தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவரை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல் கூறினார்கள்.

இதனால் சரவணன் குடும்பத்தினர் பதறித் துடித்தனர். அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சரவணன் உடலை மேலூருக்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பலியான சரவணனுக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்