சுவையான இறால் சூப் செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
இறால் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு- தலா டீஸ்பூன்
வெள்ளை வெங்காயம்  - 1
சோயா சாஸ்  - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார்  - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
செய்முறை:
 
* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள். கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
 
* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி ஆகியவற்றை வதக்கி, இதனோடு இறாலைச் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ்,  வெள்ளை மிளகுத்தூள் ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவி இறக்குங்கள். சத்துக்கள் நிறைந்த சுவையான இறால் சூப் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்