ஈரல் பெப்பர் ப்ரை செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
ஆட்டு ஈர‌ல் - கால் கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ‌சி‌றிதளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தனியாதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - சிறிது
எண்ணை - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு

 
செய்முறை:
 
ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அள‌வி‌ல் நறு‌க்‌கி எடு‌த்து வை‌க்கவு‌ம். வெங்காயம் மற்றும் தக்காளி,  ப‌ச்சை ‌மிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு  விழுது சேர்த்து வக்கவும். ‌பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ஈர‌ல் ம‌ற்று‌ம் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில்  வேகவிடவும். நன்கு வெந்தது‌ம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து  இறக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்