எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி போடவும். சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும். புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும்.