மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
இதில் மசாலா வகைகளைச் சேர்த்து 3 மேசைக்கரண்டி அளவு நீர் விட்டு மசாலா வாசம் போக வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் பொடியாக உதிர்த்த சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மசாலாவை சப்பாத்தி தேய்த்து அதன் நடுவே இந்த கலவையை வைக்கவும். அதன் மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விட்டு தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.