சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
சீரக தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஓமம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பூண்டு - ஐந்து பல் (நசுக்கியது)
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்
சோள மாவு - 25 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
முட்டை வெள்ளை கரு - 1

செய்முறை:
 
ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளைக் கரு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பின், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உதிரிஉதிரியாக போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன்  வறுவல் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்