சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...!

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 2
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொடைமிளகாய், சிவப்பு, மஞ்சள், பச்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு, உப்பு - சுவைக்கு

 
செய்முறை:
 
முதலில் கொடைமிளகாய், வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி இலையை, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.  ஒரு பவுலில் முட்டை அத்துடன் நறுக்கியவற்றை சேர்க்கவும். சுவைக்கு உப்பு, பொடித்த மிளகு சேர்க்கவும். நன்கு கலந்து  கொள்ளவும். 
 
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்க்கவும். உருகி வரும் பொழுது முட்டை கலவையை சேர்க்கவும். சிறிது நேரம் மூடி, அடுப்பை மீடியமாக வைக்கவும். பின்பு திறந்து பிரட்டி விடவும். மேலே சீஸ் தூவவும். பிறகு திறந்து தட்டிற்கு மாற்றி  நறுக்கிய  வெங்காயத்தாள் அலங்கரித்து பரிமாறவும். சுவையான சத்தான சீஸ் ஆம்லட் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்