விரால் மீன் சாம்பார்

திங்கள், 4 ஏப்ரல் 2011 (18:18 IST)
தேவையானவை:

பெரிய விரால் மீன் - 1
துவரம் பருப்பு - ஒன்றரை ஆழாக்கு
புளி - எலுமிச்சம் பழ அளவு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 1
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய விரால் மீனை சுத்தம் செய்து குடல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டி தண்ணீரில் அலசி சுத்தம் செய்துகொள்ளவும்.

அரை ஆழாக்கத் துவரம் பருப்பை இரண்டு ஆழாக்குத் தண்ணீரில் நல்லெண்ணையும் சிறிது மஞ்சள் தூளும் போட்டுக் குழை வேகவைத்து அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

இரண்டு ஆழாக்குத் தண்ணீரில் எலுமிச்சம்பழம் அளவு புளியும், உப்பு மூன்று தேக்கரண்டியும் போட்டு நன்றாகத் கரைத்து, மிளகாய்த்தூள் ஐந்து தேக்கரண்டி போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் பச்சை மிளகாய்த் துண்டுகள், அரிந்து வெங்காயம், நறுக்கிய பூண்டு ஒன்று போட்டு வதக்கி பின்னர் கறிவேப்பிலையும் சேர்த்த பின்னர் மீன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கியதும், புளிக் கரைசலைக் கொட்டிக் கொதிக்க விடவும். அதன்பின்னர் பருப்பைக் கொட்டி கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும், கொத்துமல்லி தூவி இறக்கிவிடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்