கறி கோலா உருண்டை

புதன், 12 டிசம்பர் 2012 (13:17 IST)
FILE
விடுமுறை நாளன்று குடும்பத்தினர் அனைவரையும் கவர இந்த மாறுபட்ட சிற்றுண்டியை செய்து பாருங்கள்.

தேவையானவை :

கொத்துக்கறி - 1/2 கிலோ, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5, கறிவேப்பிலை - சிறிது , மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன், தனியா பொடி- 1/2 ஸ்பூன் , மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், உப்பு - தேவைகேற்ப, வறுத்த உடைத்த கடலை - 2 ஸ்பூன், பட்டை ௦- சிறிது, கிராம்பு - சிறிது, சோம்பு - சிறிது,எ ண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை :

வறுத்த உடைத்த கடலை, பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியே நன்கு அரைத்துக்கொள்ளவும். இரண்டு கலவையையும் சேர்த்து அதனோடு வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா பொடி, உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்