சரஸ்வதியின் அருளும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமும்!!!

திங்கள், 10 அக்டோபர் 2016 (11:41 IST)
தீமையை அழிப்பதற்கு துர்க்கை தோன்றினாள். யஜூர் வேதத்தில் உள்ள துர்கா ஸூக்தம், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனைப் போக்கி, காப்பாற்றுவதற்கு நீ இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று சொல்லி, துர்க்கையின் பெருமையை விளக்குகிறது.


 
 
சரஸ்வதி தேவி வழிபாடு. சரஸ்வதி, படைப்புக் கடவுளான நான்முகனின் துணைவி. படைப்புக்கு அறிவும் ஆற்றலும் அவசியம் என்பதால் சரஸ்வதி பூஜையை நவமியில் கொண்டாடுகிறோம். அடுத்து தசமி. ஒன்பது நாட்களில் பெற்ற கூட்டு சக்தி வெளிப்பட்டு வெற்றி எனும் பலனைத் தரும் நாள் என்பதால் நவ அம்பிகைகளின் மொத்த வடிவம் சக்தி என்பது ஐதீகம்.
 
இறுதி நாளாகிய வீடுகளில் சரஸ்வதி பூஜை வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் சுவாமி அறையில் படிக்கும் பிள்ளைகள் தமது புத்தகங்களை பூஜையில் வைத்து வழிபட்டு தசமியன்று எடுத்துப் படிக்க வேண்டும்.
 
நவராத்திரி விரதத்தை கும்ப விரதமென்றும் சொல்வர். அம்பிகை அட்சர வடிவினள் நடைபெறும் காலத்தில் கல்விக் கூடங்களிலும் வேலை ஸ்தலங்களுலும் விஷேச கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்னையின் புகழ் பேசும் அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம் போன்றவற்றைப் பக்தியுடன் பாடினால் அன்னையின் அருள் கிடைக்கும். 10 ஆம் நாள் விஜயதசமி அன்று புதிய தொழில் ஆரம்பித்தல் நடைபெறும்.
 
நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
 
உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்