நவராத்திரி காலங்களில் துர்கை அம்மனுக்கு சொல்லக்கூடிய மந்திரங்கள்!!!!
நவராத்திரி காலங்களில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகுகாலவேளையிலும் நவராத்திரியிலும் ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா துக்கங்களும் விலகும். சிறுமியரை அம்பிகையாக பாவித்து வழிபடுவது வழக்கமாகும்.
நவராத்திரி விழாவின், ஒன்பது நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல், 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.
நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.