அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் நிறைந்து காணப்படும் யானை நெருஞ்சில்...!!

யானை நெருஞ்சிலின் இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.

யானை நெருஞ்சி இலையின் சாறு சிறுநீரகத்தில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.
 
பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்தும். உடலில் உள்ள அதிக்கொழுப்புகளை குறைத்து இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
 
வயிற்றில் ஏற்படக்கூடிய புண்ணை குணப்படுத்துகிறது. மேலும் உடலில் வலி, வீக்கம் ஆகியவற்றை சரி செய்கிறது. இது நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கி செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சீர்படுத்தி ஆக செயல்படுகிறது.
 
கல்லீரலை பலப்படுத்தி சீராக வைக்கிறது. ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.
 
பாலுணர்வு குறைபாட்டை சீர் செய்கிறது. யானை நெருஞ்சில் உடலை குளிர்ச்சிப்படுத்தும், வெள்ளைப்படுதல், வெண் குஷ்ட ரோகம், உடல் எரிச்சல், தாகம், பித்த மயக்கம் இவைகளைப் போக்கும்.
 
உண்ணும் முறை: இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு , 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும். மேலும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.
 
யானை நெருஞ்சில் காயை காய வைத்து உலர்த்தி  கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம் அரைத்து நெல்லி அளவு எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், தேக எரிச்சல்  நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்