கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மாம்பழ சீசனும் களைகட்டியுள்ளது. மாம்பழம் சத்துமிக்க பழம்தான் என்றாலும் சில பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. அதுகுறித்து பார்ப்போம்.
மாம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், காப்பர், விட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது.
மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். டயட் உணவிற்கு இது ஏற்றதல்ல.
வயிறு கோளாறு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் பேதி உள்ளிட்ட பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது.
மாம்பழம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை தொடவே கூடாது.
தொண்டை புண், தொண்டையில் தொற்றும் உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிட்டால் மூட்டுவலி, கீழ்வாத பிரச்சினைகள் ஏற்படலாம்.
மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிட்டால் வாய், உதட்டில் புண், வெடிப்பு ஏற்படலாம்