ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் என்ன...?

அருகம் புல்லை எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். வாரம் ஒரு முறை எடுத்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால், ஹீமோகுளோபின் பிரச்சனைகள் தீரும். அத்துடன், ஒரு நாளைக்கு மூன்று உலர் திராட்சை வீதம் 9 நாள் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவு கூடும்.

அதே போல் ஒவ்வொரு நாளும்  நீரில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் இதய நோய் தீரும்.
 
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். தொடர் இருமல் தொண்டை வலி போன்றவையும்  குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.
 
கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக்  கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக் கீரை, புதினாக் கீரை, அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம்  உற்பத்தியாகும்.
 
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
 
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்.
 
இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். 
 
எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்