காலிஃபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. அதேபோல் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகமாக உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.