தினமும் உணவில் பீன்ஸ் என்ன நன்மைகள் தெரியுமா...?

தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். தொண்டைப்புண், இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு. இதய அடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.
 
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.
 
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பீன்ஸ் காய்கள் சாப்பிடுவதால், அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
 
பீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும். இரத்தச் சோகை இருப்பவர்கள் பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை  நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகிறது.
 
நார்ச்சத்து உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.
 
பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு  ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்