மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் காய்கறிகள் என்ன...?

முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுகையில் உணவில் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளுவது மிகவும் நன்மை பயக்கும். இனிப்பு உருளைக்கிழங்கில் நீர்,  நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன.
 
250 மில்லி கேரட் சாறுடன் 50 மில்லி பசலைக் கீரையின் சாறு மற்றும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும் பசலைக்கீரைக்கு குடலை சுத்தம் செய்யும் தன்மை உண்டு. குடித்தவுடன் சுமாராக இரண்டு மாதங்கள் வரை இந்த சாறு குடலில் தங்கியிருந்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.
 
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நம்மை அண்டவே அண்டாது. சண்டிக் கீரையில் உள்ள செல்லுலோஸ் என்னும் சத்தானது தொடர்ந்து  சாப்பிட்டு வர பல நாளாக மலச்சிக்கலால் அவதிப்படுவர் அதில் இருந்து மீண்டு வரலாம்.
 
நமது வயிற்றின் ஜீரண பாதையில் எங்கு கழிவுகள் தேங்கி இருந்தாலும் பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலமாக அந்த கழிவுகளை வெளியேற்றி புத்துணர்ச்சி அளிக்கும். எதிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் இது செயல்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்