சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து, என அனைத்து வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.
சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள், மூலநோய், வயிற்று பிரச்சனைகளை போக்க சுரைக்காய் பயன்படுகிறது.
மூல நோய்களில் பல வகையுண்டு. உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என ஏராளமான வகைகள் உண்டு. அவற்றையெல்லாம் மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் சுரைக்காய் கொண்டுள்ளது.
கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். மேலும் சரும சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து உங்க உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும், முழு சக்தியுடன் செயல்படவும் உதவியாக இருக்கும்.