பிராய்லர் கோழிகள் அடிப்படையில் மரபணு மாற்றப்பட்ட கோழிகள் ஆகும். இயற்கையில் இருக்கிற கோழிகளுக்கென்று உள்ள தன்மையிலிருந்து மாறி, அதன் எடை அதிகரித்து காணப்படும். அதனை வளர்க்கத் தொடங்கி விற்கும்வரை அதற்கு கொடுக்கப்படும் உணவு முதல் அதற்கு செலுத்தப்படும் மருந்துகள் ஊசிகள் அனைத்தும் ரசாயனங்களால் ஆனது.
உணவுகள் மூலமும் நேரடியாக மருந்துகள் மற்றும் ஊசிகள் மூலம் செலுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்காக வளர்கிற கோழிகளுக்கு எந்த நோயும் வராமல் இருப்பதற்காகவும், 40 நாட்களிலேயே அதிக எடையுடன் வளர்வதற்காகவும் இதுபோன்ற மருந்துகள் செலுத்தப்படுகிறது.
நாட்டுகோழி விலை மிகவும் அதிகமாக விற்கப்படுவதால் மக்கள் அதை வாங்கி உண்பதை தவிர்த்து விடுகின்றனர். அதற்கு மாறாக விலை மலிவாக கிடைக்கக் கூடிய, உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழியை வாங்கி சாப்பிடுகின்றனர்.
பிராய்லர் கோழியை அதிக அளவில் விரும்பி சாப்பிடுவதால் பல்வேறு பருவ மாற்றங்களுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். சிறு வயதிலேயே பூப்படைதல், இளம் வயதிலேயே அதிகப்படியான வளர்ச்சியடைதல், சர்க்கரை நோய் அதிகரிப்பு, புற்று நோய், மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், தோல் பிரச்சனைகள், என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.