வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது. மிக குறைந்த அளவு சோடியம் மற்றும் பூஜ்ய அளவு கொழுப்பு உள்ளது.
வெங்காயத்தில் குர்செடின், ஃபிளாவனாய்டு எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்ற சல்பர் சேர்மங்கள் உள்ளன. வெங்காயத்தில் செலினியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். மேலும், செலினியம் குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் உள் செயல் முறைகளால் சேதப் படுகின்றன. இவ்வாறு சேதம் அடைந்த செல்கள் புரதத்தை உற்பத்தி செய்வதிலும் கால்சியம் சத்தை கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.