அத்திப்பழத்தில் அதிக நார் சத்தும் நிறைந்துள்ளது. நார் சத்து உள்ளதால் மலசிக்கல் ஏற்படாமலும் காக்கும். அத்திப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
அத்திப்பழத்தை எலுமிச்சை பழ சாரோடு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால், நல்ல பொலிவும், புத்துணர்ச்சியும் உங்கள் முகத்திற்கு கிடைக்கும்.
அத்திப்பழத்தை தேனோடு சேர்த்து நன்கு மசித்து உங்கள் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைவதை நீங்கள் காணலாம். இது உங்கள் முகப்பருக்களை போக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.