பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.
பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.
பீட்ரூட் ஜூஸ்ஸில், கீரைகளை விட அதிக இரும்புச்சத்து உள்ளது. பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும். பீட்ரூட் சாறில் கால்சியம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் உதவும்.
பீட்ரூட்டில் உள்ள ஃபோலிக் அமிலம், கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களது உணவில் பீட்ரூட்டை சேர்க்க மிகவும் தகுந்த உணவு. ஃபோலிக் அமிலம் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..இதிலுள்ள ஃபோலாசின் பெண்களின் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. கருவுறும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.