நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் என்ன...?

திங்கள், 25 ஜூலை 2022 (15:37 IST)
இயற்கையில் விளைந்த பழங்களிலும், காய்கறிகளிலும், மூலிகைகளிலும் அதிகம் உள்ளது. ஊட்டசத்துக்கள். உடலில் தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதலிடம் வகிப்பது வைட்டமின் சி, அடுத்தது வைட்டமின் ஏ மற்றும் பி.


வைட்டமின் சி பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்கொடி குடைமிளகாய், போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாய் காணப்படுகிறது. புற்று நோயை கூட கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. திசுக்களின் வளர்ச்சிக்கும், உயிரணுக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சைபழச்சாறு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது. அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியுறும். மேலும் நன்மை செய்யும் பாக்டீரிக்கள் வாழ்வதற்குரகய வெப்பமான சூழ்நிலையை பராமரிக்க எலுமிச்சைபழச்சாறு உதவுகிறது. சாலட், அசைவ உணவுகள் போன்றவற்றில் எலுமிச்சை பழச்சாறு கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

கொய்யாப்பழம், சுலபமாக எல்லோராலூம் வாங்கக்கூடிய பழம். ஆனால் அளப்பறிய வைட்டமின்களை தன்னகத்தே கொண்டது. வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம்,  போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எலும்புகள் வளர்ச்சிக்கும், உடலுக்கு உறுதியையும் தருகிறது.

பொட்டாசியம் சத்து கொய்யப்பழத்தில் அதிகம் உள்ளது. கொய்யாப் பழத்திலிருக்கும் மெக்னீஷியம் பிற உணவுகளிலிருந்து சத்துக்களை உறிஞ்சு எடுத்து உடலுக்கு அளிக்கிறது. இதன் காரணமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு சென்றடைகிறது. நோய் காரணிகளை எதிர்த்து போராடுவதோடு, நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்