அன்றைய காலங்களில் சத்தான உணவு முறையையும், கடின உடல் உழைப்பையும் கொண்ட நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் வாழ்ந்தனர். ஆனால் மாறி வரும் இந்த கணினி உலகத்தில் நாம் அனைவரும் பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட, துரித உணவு வகைகளை பயன்படுத்துகிறோம்.
சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இவ்வாறு ஏற்பட்டால் சிறுநீரகத் திசுக்கள் அழிக்கப்படுகின்றன. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்தால் வாதம் ஏற்படுகிறது. இதுவே இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான் எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக உள்ளது.
மூளை, இதயத்தைத் தொடர்ந்து சிறுநீரகம் தான். இதற்கும் காரணம் இரத்தக் கொதிப்பு தான். இரத்தக் கொழுப்பு இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் அது சிறுநீரகத்தைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்படும் திறன் குறைந்து இறுதியில் சிறுநீரகம் தன் செயல்படும் தன்மையை இழந்து விடும் நிலை உருவாகும்.