கால்சியம் சத்தானது உடல் வளர்ச்சிக்கும், எலும்புகளின் உறுதிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. கால்சியம் சத்து குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். நம் உடலில் கல்சியத்தின் பெரும்பகுதி, எலும்புகளிலும் பற்களிலும் காணப்படுகின்றன.
கால்சியம் சத்து இழப்பு ஏற்பட்டு ஓஸ்டியோபொராசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இதனால் பெண்கள் அதிக மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு பலமிழப்பு போன்றவை உண்டாகும்.
கால்சியம் சத்து குறைவால் வயிற்றுப் பகுதியின் சுவர்கள் சிதைந்துவிடுகின்றன. இதனால் உணவில் உள்ள பொருட்களை உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதனால் நகங்கள் வெளுத்து, பற்கள் தேய்மானம் அடையும். பற்களில் கூச்சம், பற்சிதைவு ஏற்படும்.
பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. பழங்களில் கொய்யா, பப்பாளி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, ஆப்பிள், முளைகட்டிய பயறு வகைகளில் அதிக கால்சியம் உள்ளது.