நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகள் அதிகம் இருப்பதால் இரத்த சோகைக்கு மருந்தாக பயன்படுகிறது.
சிலருக்கு உடலில் பித்தம் அதிகரிப்பதால் மயக்கம், தலைசுற்றல், உடல் சூடு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும். அவர்களுக்கு 2 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு மற்றும் தேனை 100 மி.லி நீரில் கலந்து சாப்பிட்டால் உடலில் பித்தத்தை சீராக்குகிறது.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தலை குறைத்து, முடி கருமையாக வளரவும், பொடுகு தொல்லையை நீக்கவும் உதவுகிறது.
தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றுபுண், நெஞ்செரிச்சல், ஜீரண கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.