சோயா உணவுகளை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

சனி, 22 ஜனவரி 2022 (16:16 IST)
சைவ உணவான சோயா உணவிலிருந்து நமக்கு தேவையான புரோட்டின் அதிக அளவு கிடைக்கிறது. இந்தப் புரதத்தில் நம் உடலுக்கு அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது.


இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியாது. முக்கியமாக, கடல் மீன்களில் காணப்படும் அமினோ அமிலம் ஆன ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவான இதில் அதிகம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, இதை இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று உணவு என்று சொல்லலாம்.

எனவே, இறைச்சி பிடிக்காதவர்கள், நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த மீள்மேக்கரைப் சாப்பிடலாம். இதனால், இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

சோயாவிலுள்ள கிடைக்கக்கூடிய சோயா பால், சோயா சீஸ், சோயா எண்ணெய் இவற்றிலும் புரதசத்து அதிகமாக உள்ளது. இதயத்தின் சக்தியை கூட்டுவதில் சோயா அபாரமாக செயல்படுகிறது.

இது இரத்தக் குழாய்களின் இலகு தன்மை அதிகரித்துக் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும், இதில் இயற்கையாகவே உள்ள அன்டிஆக்ஸடன்ட் வைடமன் ஏ லெஸன் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

சோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிறப்பை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது. இதனால் மெனோ பாக்ஸ் பிரச்சனைகள் தடுக்கும் ஆற்றல் சோயாவிற்கு உண்டு.

அதாவது மெனோ பாக்ஸ் நின்றவுடன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நின்று விடும். இதனால் பெண்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவை ஏற்படக்கூடும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிக்கும் தன்மை சோயா பீன்ஸ்க்கு உள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க சோயா உணவுகளை எடுத்து வருவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்