முடி கொட்டுதலை நிறுத்தி மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறத. ஹென்னாவின் இயற்கை பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் தூளை வழக்கமான முடி எண்ணெயுடன் கலந்து 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இந்த எண்ணெய் குளிர்ந்ததும், இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இது முடி உதிர்தலைத் தடுக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்
ஒரு கொத்து கருவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொண்டு, இந்த கலவையை உங்கள் வேர்கால்களில் படும்படி தலையில் தடவ வேண்டும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் உபயோகித்து குளிக்க வேண்டும். இந்த முறை வாரம் 2 முறை பயனளிக்கும்.