குழந்தைகளுக்கான அருமருந்து வசம்பு. விஷம் குடித்தவரும் பிழைத்துக்கொள்ளும் தன்மையை கொண்டது வசம்பு. நமது முன்னோர்கள் வசம்பை வீட்டில் கட்டாயம் வைத்திருந்த நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளின் வாயில் சிறிதளவு உரசி வைப்பார்கள்.
விஷம் அருந்திய நபர்களுக்கு, உடனடியாக வசம்பை இரண்டு தேக்கரண்டியில் இருந்து மூன்று தேக்கரண்டி கொடுத்தால், உடலில் உள்ள விஷம் முழுவதுமாக வெளியேறிவிடும்.
வசம்பு பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வந்த மருத்துவ பொருளாகும். குழந்தைகளின் வயிற்று வலி, வாயுத்தொல்லை, நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
வயிறு வீக்கம், பூச்சிகள் நெருங்காமல் இருக்க, இருமல் பிரச்சனை, மூளை வளர்ச்சி, பார்வை திறன், உடலில் நச்சு வெளியேற்றம், வயிற்று போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு வசம்பு சிறந்த மருந்தாக அமைகிறது.