சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும் தக்காளி...!!

தக்காளி பழத்தின் சார்றினை சருமத்தில் தடவி உலர வைத்தால் சிறந்த சன் ஸ்கிரீன் போன்று செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும். இதற்கு காரணம் இதில் உள்ள லைகோபைன் எனும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தான்.
தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க முடியும்.
 
தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து  செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.
 
எலுமிச்சை பழச் சாறினை தக்காளி பழச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் சரியாகி முகப்பருக்கள்  வருவது குறையும்.
தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச்சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.  சரும எரிச்சலை தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும். தக்காளி  பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்