பயன்படுத்தும் முறை: ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி சர்க்கரை, 2 மேசைக்கரண்டி வடித்த கிரீன் டீ, 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி குறைந்தது 6 நிமிடங்களாவது வட்டவடிவில் மசாஜ் செய்வதன் மூலம் இறந்த கலங்களை நீக்க முடியும். 5 நிமிடங்களின் பின்னர் முகத்தினை நீரினால் கழுவினால் சருமம் பளபளக்கும்.