எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்ட தக்காளி...!

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
 
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில்  பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட்  (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
 
தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும்  தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கும்.
 
தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டிஎன்ஏ தான் நமது  சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன்,  வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.
 
சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால்  ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
 
தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. தக்காளி பழத்தில்  வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும்  திடமாகவும் மாற்றுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்