அடி வயிற்றில் சேரும் கொழுப்பை நீக்க உதவும் குறிப்புகள் !!

வியாழன், 20 ஜனவரி 2022 (18:48 IST)
பெண்களுக்கு அடி வயிற்று பகுதியில் தான் கொழுப்பு அதிக அளவில் சேரும் காரணம் அதிக அளவு உறுப்புகள் வயிற்றில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் அது அடி வயிற்றில் கொழுப்பை அதிக அளவு சேர்க்கிறது.


உடற்யிற்சியின் மூலம் தொப்பையைக் குறைக்கலாம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கொழுப்புக் குறைத்து தொப்பையைக் குறைக்கலாம்.

தினந்தோறும் அதிக அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள் முதலில் எடுத்துக்கொள்வது க்ரீன் டீ. ஏனெனில் க்ரீன் டீ நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க அதிக பயனுள்ளதாக இருக்கும்.

காபி, டீ குடிப்பதற்கு பதிலாக க்ரீன் டீ குடித்தாலே போதுமானது. ஆனால் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு இரண்டு டம்ளருக்கு அதிகமாக குடிக்கக் கூடாது.

டயட் என்றாலே சாப்பாதி, ஓட்ஸ், பழங்கள் சாப்பிடலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால் பழங்களில் அனைத்து வகையான பழங்களையும் நாம் சாப்பிடக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்