சில உணவுகளின் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் குறிப்புகள்...!!

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான வழியாகும். நாள் முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் திரவங்கள் உணவுகள் உங்கள் இரத்த அழுத்த எண்ணிக்கைகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்கள் உணவு உங்கள் இரத்த அழுத்தத்தில்,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மாதுளை சாறு உதவும். ஒரு கப் மாதுளை சாற்றை 28 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். புதிதாக தயாரிக்கப்பட்ட மாதுளை சாற்றை குடிக்க வேண்டும். பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பழச்சாறுகள்  சர்க்கரை மற்றும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
 
கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வதும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதோடு மற்ற அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும்  வழங்கும். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம்.
 
பீட்ரூட் சாறு மற்றொரு ஆரோக்கியமான பானமாகும். இது இரத்த அழுத்த எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. பீட்ரூட் சாற்றில்  இருக்கும் நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.
 
அன்னாசி பழச்சார்றில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். இதில் சோடியமும் குறைவாக இருப்பதால் உயர்  இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு இது நன்மை பயக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்