பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள திப்பிலி !!

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள திப்பிலி மிக முக்கியமாக இருமல், மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள், தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள், மூக்கு சம்பந்தமான பிரச்சனைகள், கபத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மிக வேகமாக குணமாக்கக் கூடியது. 

காசநோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை திப்பிலிக்கு உண்டு. 
 
மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணமாக்கும் மருந்து பொருளாக ஆதிகாலத்திலிருந்தே இந்த திப்பிலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில்  சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து செய்யப்படக்கூடிய திரிகடுகம் மருந்து மிகவும் புகழ்பெற்றது.
 
பச்சை திப்பிலி கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பிலி கபத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. திப்பிலி காய்களில் பைப்பரின் மற்றும் லாங்குமின்  போன்ற வேதிப் பொருள்கள் உள்ளது. இந்த லாங்குமின் என்ற வேதிப்பொருள் உடலில் ஏற்படக்கூடிய தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம்,  சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 
 
திப்பிலியின் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வயதானவர்களுக்கு அடிக்கடி இந்த மூச்சடைப்பு, மூச்சிரைப்பு பிரச்சனைகள் ஏற்படும். சிறிது தூரம் நடந்தாலே அவர்களால் சரியாக சுவாசிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் மாடிப்படிகளில் ஏறினால் மிகவும்  சிரமத்திற்கு உள்ளாவார்கள். இந்த பிரச்சனையை போக்குவதற்கு அற்புதமான ஒரு மருத்துவ முறை உள்ளது.
 
திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி இது இரண்டையும் சம அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் விட்டுக் குழைத்து அரை டீஸ்பூன் அளவில் காலை, மாலை என இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய், மூச்சிரைப்பு, மூச்சடைத்தல், மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்