உணவில் சுவையை அதிகப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் இஞ்சி இருக்கிறது. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களுக்கு இஞ்சி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது நம் அனைவருக்கும் தெரியும். இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.
ரத்தம் உறைதலே பக்கவாதம், வலிப்பு நோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க வைட்டமின் கே சத்து உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம், நம் உடலுக்கு வைட்டமின் கே சத்து கிடைக்கிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது முடி பிரச்சனைகளை குணப்படுத்த தேவையான பண்புகளை வெளியிடவல்லது. முடி வளர்ச்சியை தூண்டி விட்டு, மேம்படுத்த இஞ்சி எண்ணெய் அதிகம் உதவும்.
இஞ்சி சாப்பிடுவது, நம் உடலில் இன்சுலின் சத்தை அதிக அளவில் சுரக்க செய்து, சர்க்கரை நோய் வராமல் செய்கிறது. நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா போன்ற சில கிருமிகளை நம் உடம்பிற்குள் வரவிடாமல் இஞ்சி சாப்பிடுவது தடுகிறது.