வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இந்நோய்களில் இருந்து விடுபடலாம். தினமும் இரவு உணவிற்குப்பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
உலர் திராட்சை: உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
தினமும் மாதுளை பழச்சாறு அருந்துவதால், உடலை சுறுசுறுப்பாக்கிவிடும். மூளையை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை காணாமல் போகச் செய்யும்.